/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பணம் வசூலிப்பாளரிடம் ரூ.14 லட்சம் பறிமுதல்
/
பணம் வசூலிப்பாளரிடம் ரூ.14 லட்சம் பறிமுதல்
ADDED : ஆக 04, 2024 12:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வியாசர்பாடி, வியாசர்பாடி, அசோக் பில்லர் அருகே, வாகன சோதனையில் நேற்று முன்தினம் இரவு போலீசார் ஈடுபட்டனர்.
அவ்வழியே வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி, அதை ஓட்டி வந்த சவுகார்பேட்டை மோகன்லால், 40, என்பவரை விசாரித்தனர். தனியார் நிதி நிறுவனத்தில், பணம் வசூல் பிரிவில் அவர் பணிபுரிவது தெரிய வந்தது.
முன் பின் முரணாக பேசியதால் அவரது பையை சோதனையிட்டதில் 14.75 லட்சம் ரூபாய் இருந்தது.
அதற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால், வியாசர்பாடி போலீசார், அப்பணத்தை பறிமுதல் செய்து, நுங்கம்பாக்கம் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். ஹவாலா பணமா என மோகன்லாலிடம் விசாரிக்கின்றனர்.