ADDED : ஜூலை 22, 2024 01:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:சென்னை மாநகராட்சி எல்லை சாலைகளில், மாடுகளை உலாவ விட தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதையும் மீறி, சுற்றித் திரியும் மாடுகளால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். பாதசாரிகளையும் முட்டி காயப்படுத்துகிறது.
இதனால், சாலையில் உலாவும் மாடுகளை பிடிக்க, மாநகராட்சி தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்படி, ஜனவரி முதல் ஜூலை 21 வரை, 1,469 மாடுகள் பிடிக்கப்பட்டு உள்ளன. மாட்டின் உரிமையாளர்களுக்கு, 60 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

