ADDED : ஆக 21, 2024 12:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, நம் நாளிதழில் வெளியான செய்தியை தொடர்ந்து போக்குவரத்திற்கு இடையூராக நிறுத்தப்பட்டிருந்த, 15 ஆட்டோ ஓட்டுனர்களுக்கு தலா, 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
புரசைவாக்கம் நெடுஞ்சாலையில், மேம்பாலம் அருகே சாலையை ஆக்கிரமித்து, 20க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் நிறுத்தப்பட்டு வந்தன. இதனால் அப்பகுதியில் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுதொடர்பாக நேற்று நமது நாளிதழில், புகைப்படத்துடன் செய்தி வெளியானது.
அதை தொடர்ந்து, சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டிருந்த, 15 ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நேற்று தலா, 500 ரூபாய் அபராதம் விதித்து, அப்புறப்படுத்தப்பட்டன. சாலையை ஆக்கிரமித்து நிறுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என, போக்குவரத்து போலீசார் எச்சரித்தனர்.