/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஐ.டி.ஐ., விண்ணப்பம் வரும் 15 கடைசி நாள்
/
ஐ.டி.ஐ., விண்ணப்பம் வரும் 15 கடைசி நாள்
ADDED : ஜூலை 05, 2024 12:45 AM
சென்னை,கிண்டி மற்றும் திருவான்மியூரில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில், 2024ம் ஆண்டிற்கான நேரடி சேர்க்கை நடக்கின்றன.
திருவான்மியூரில் எலக்ட்ரீஷியன், எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட நான்கு தொழில் பிரிவுகளும், கிண்டியில், ஸ்மார்ட் போன் டெக்னீஷியன், இயந்திர தொழில்நுட்ப வல்லுனர், ரோபாட்டிக்ஸ் மற்றும் டிஜிட்டல் உற்பத்தி தொழில்நுட்ப வல்லுனர் உள்ளிட்ட தொழில் பயிற்சிகளும் உள்ளன.
பயிசியில் சேர விரும்புவோர், இம்மாதம் 15ம் தேதிக்குள் நேரடியாக பயிற்சியில் சேரலாம்.
மேலும் விபரங்களுக்கு, கிண்டி நிலையத்திற்கு, 044 2250 1350 எண்ணிலும், திருவான்மியூருக்கு 7200 03262, 94442 47028, 89396 46933 ஆகிய எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் என, சென்னை மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது.