/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.2.30 லட்சம் மதிப்புடைய 1,600 மதுபாட்டில்கள் பறிமுதல்
/
ரூ.2.30 லட்சம் மதிப்புடைய 1,600 மதுபாட்டில்கள் பறிமுதல்
ரூ.2.30 லட்சம் மதிப்புடைய 1,600 மதுபாட்டில்கள் பறிமுதல்
ரூ.2.30 லட்சம் மதிப்புடைய 1,600 மதுபாட்டில்கள் பறிமுதல்
ADDED : ஏப் 18, 2024 12:23 AM
சேலையூர், சேலையூர் அடுத்த மாடம்பாக்கம் பகுதியில், தேர்தல் பறக்கும் படையினர் நேற்று, வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அவ்வழியாக வந்த மினி வேனை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது, அதில், பெட்டிப் பெட்டியாக விலை உயர்ந்த மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.
அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், மதுபாட்டில்கள் மற்றும் மினி வேன் ஓட்டுனர், கன்டோன்மென்ட் பல்லாவரம், மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஏழுமலை, 21, என்பவரை பிடித்து, சேலையூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
விசாரணையில், வாகனத்தில் ஏற்றிய லோடு குறித்து, தனக்கு எதுவும் தெரியாது என பிடிபட்ட நபர் கூறினார். மேலும், பம்மலைச் சேர்ந்த உதயகுமார் என்பவர், மதுபாட்டில்களை ஏற்றியதும் தெரியவந்தது. தொடர்ந்து, 2.30 லட்சம் ரூபாய் மதிப்புடைய 1,600 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
புதுவண்ணாரப்பேட்டை, வி.ஓ.சி., நகரில் பைக்கில் வந்த ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு, விலாம்பாக்கத்தைச் சேர்ந்த இளங்கோவன், 66, என்பவரை தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்து அவரிடம், ஆவணமின்றி இருந்த 1.37 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.
இதேபோல், எண்ணுார், பெரியகுப்பம் பகுதியில், எண்ணுாரைச் சேர்ந்த கோபி, 50, என்பவர் பைக்கில் ஆவணமின்றி கொண்டு சென்ற 2 லட்சம் ரூபாயை பறக்கும் படை அதிகாரிகள் நேற்று பறிமுதல் செய்தனர்.

