/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அமெரிக்க உயர் கல்வி சென்னையில் 17ல் கண்காட்சி
/
அமெரிக்க உயர் கல்வி சென்னையில் 17ல் கண்காட்சி
ADDED : ஆக 13, 2024 12:12 AM
சென்னை, அமெரிக்காவில் உள்ள உயர் கல்வி வாய்ப்புகள் குறித்த கல்வி கண்காட்சியை, சென்னையில் உள்ள அமெரிக்க துணை துாதரகம், வரும் 17ல் நடத்த உள்ளது.
உலகம் முழுதும் 175க்கும் மேற்பட்ட நாடுகளில், 430க்கும் மேற்பட்ட சர்வதேச மாணவர் ஆலோசனை மையங்களுடன், எஜுகேஷன் யு.எஸ்.ஏ., என்ற அமெரிக்க அரசின் கல்வித் துறை அமைப்பு செயல்படுகிறது.
இதன் சார்பில், நாட்டில் எட்டு இடங்களில், அமெரிக்காவில் உள்ள உயர் கல்வி வாய்ப்புகள் குறித்த கண்காட்சி, வரும் 16ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடக்க உள்ளது. அதில், 17ம் தேதி, சென்னை, ஹில்டன் ஹோட்டலில், இந்த கண்காட்சி நடக்க உள்ளது.
அமெரிக்காவின் அங்கீகாரம் பெற்ற 80 கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள், அங்குள்ள உயர் கல்வி குறித்து மாணவர்களுக்கு விளக்க உள்ளனர். இந்த கண்காட்சியில் பங்கேற்போர், தங்களைப் பற்றிய விபரங்களை, bit.ly/EdUSAFair24Emb என்ற இணையதள இணைப்பில் பதிவிட்டு, வருகையை உறுதி செய்ய வேண்டும்; கட்டணம் இல்லை.
இதுகுறித்து, இந்தியாவுக்கான அமெரிக்கத் துாதர் எரிக்கார்செட்டி வெளியிட்டுள்ள அறிக்கை:
அமெரிக்காவில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கலை அல்லது வணிகம் சார்ந்து நிறைய படிப்புகள் உள்ளன. அவற்றுக்கான கல்லுாரிகள், பல்கலைகள் இந்த கண்காட்சியில் பங்கேற்க உள்ளன.
மேலும், துாதரக அதிகாரிகளும் இதில் பங்கேற்று, அமெரிக்காவுக்கான மாணவர் விசா பெறும் நடைமுறைகள் குறித்து விளக்க உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.

