/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
196 கிலோ பறிமுதல் கஞ்சா அழிப்பு ஆவடி போலீசார் நடவடிக்கை
/
196 கிலோ பறிமுதல் கஞ்சா அழிப்பு ஆவடி போலீசார் நடவடிக்கை
196 கிலோ பறிமுதல் கஞ்சா அழிப்பு ஆவடி போலீசார் நடவடிக்கை
196 கிலோ பறிமுதல் கஞ்சா அழிப்பு ஆவடி போலீசார் நடவடிக்கை
ADDED : மே 07, 2024 11:59 PM

ஆவடி, ஆவடி போலீஸ் கமிஷனரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில், போதைப்பொருள் மற்றும் குட்கா புழக்கத்தை கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ள கமிஷனர் சங்கர் உத்தரவிட்டார்.
அதன்படி, ஒவ்வொரு காவல் நிலையங்களில், ஆவடி மதுவிலக்கு அமலாக்கத் துறையின் கீழ் தனிப்படைகள் அமைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
கடந்த ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை, 61 கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களிடம் இருந்து, 196 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
நீதிமன்ற உத்தரவுப்படி, பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை அழிக்கப்பதற்கு, ஆவடி கூடுதல் போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன், ஆவடி துணை போலீஸ் கமிஷனர் அய்மான் ஜமால் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட 196 கிலோ கஞ்சாவை, நேற்று முன்தினம் செங்கல்பட்டு மாவட்டம், தென்மேல்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் கொட்டி அழிக்கப்பட்டது.