/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
2 வக்கீல்கள் நீக்கம் ரத்து சி.எம்.டி.ஏ., உத்தரவு
/
2 வக்கீல்கள் நீக்கம் ரத்து சி.எம்.டி.ஏ., உத்தரவு
ADDED : மார் 29, 2024 12:25 AM
சென்னை,: வழக்கறிஞர்கள் நீக்கத்தில் அவசரமாக எடுத்த முடிவை, சி.எம்.டி.ஏ., நிர்வாகம் திடீரென மாற்றிக்கொண்டுள்ளது.
சி.எம்.டி.ஏ., சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்தப்படுகிறது. கோயம்பேடு சந்தை வளாகம், கட்டட அனுமதி தொடர்பாக பல்வேறு வழக்குகள், வெவ்வேறு நீதிமன்றங்களில் நடக்கின்றன.
இந்த வழக்குகளில் சி.எம்.டி.ஏ., சார்பில் ஆஜராக, 13 வழக்கறிஞர்கள் அடங்கிய குழு உள்ளது. இக்குழுவில் உள்ள, சி.என்.வினோபா, ஒய்.புவனேஷ் குமார் ஆகியோரை திடீரென நீக்கி, உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா உத்தரவிட்டார்.
குழும கூட்டத்தில் விவாதிக்காமல் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இந்த நிலையில், கோயம்பேடு சந்தையில் ராம்கி என்விரோ தொடர்பான வழக்குகளை சி.என்.வினோபா தொடர்ந்து கவனிப்பார் என, சி.எம்.டி.ஏ., தெரிவித்துள்ளது.
இதேபோன்று, ஒய்.புவனேஷ் குமார் வழக்கம் போன்று சி.எம்.டி.ஏ., வழக்குகளில் ஆஜராவார் என்றும் சி.எம்.டி.ஏ., தெரிவித்தது. வழக்கறிஞர்கள் நீக்கத்தில் அவசர கோலத்தில் எடுத்த முடிவை, சி.எம்.டி.ஏ., நிர்வாகம் மாற்றிக்கொண்டுள்ளது.

