/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தொழில் துறையினருக்கான கண்காட்சி நந்தம்பாக்கத்தில் இன்னும் 2 நாள் பல வகை இயந்திரங்கள், கருவிகளுக்கு வரவேற்பு

ADDED : மே 03, 2024 12:27 AM

'மிடாஸ் டச்' நிறுவனம் சார்பில், பிரமாண்ட தொழிற்சாலைகளுக்கு தேவையான பாதுகாப்பு, பொருட்களை கையாளும் உபகரணங்கள், பொருட்களுக்கான பேக்கேஜ் மற்றும் ஆட்டோமேஷன் ரோபோட்டிக்ஸ் இயந்திரங்கள் குறித்த, மூன்று நாள் கண்காட்சி, சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நேற்று துவங்கியது.
துவக்க விழாவில், பிளாஸ்டிக் ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் மண்டல இயக்குனர் ரூபன் ஹாப்டே சிறப்பு விருந்தினராக பங்கேற்று, கண்காட்சியை துவக்கி வைத்து பேசினார்.
கண்காட்சி குறித்து, 'மிடாஸ் டச்' இயக்குனர் விவேகானந்தன் கூறியதாவது:
இந்த கண்காட்சி, மூன்றாவது முறையாக நடத்தப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய நிறுவனங்களின், 'வேர்ஹவுஸ்'க்கு தேவையான இழுவை, பளுதுாக்கி உள்ளிட்ட இயந்திரங்கள் தேவைப்படுகின்றன. அதேபோல, சரக்கு கையாள்வதும் அவசியப்படுகிறது.
மேலும், 'ஆட்டோமேஷன், ரோபோட்டிக்ஸ்' மிக மிக தேவையாகிறது. இவை தேவைப்படும் நிறுவனங்களுக்கும், இதுபோன்ற இயந்திரங்கள், பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் பாலமாக, இந்த கண்காட்சி திகழ்கிறது.
வரும் ஆக., மாதம், கோவையில் பிளாஸ்டிக் பொருட்களுடன் சேர்த்து, கண்காட்சி நடத்தப்படவுள்ளது. கடந்த முறை நடந்த கண்காட்சியில், 37,000 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்துள்ளது. இம்முறை, 150க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன. 10,000 பார்வையாளர்களையும், 50,000 கோடி ரூபாய்க்கான வர்த்தகத்தையும் எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கண்காட்சியில் இன்று 10 தொழில் சம்பந்தப்பட்ட கருத்தரங்கங்கள் நடத்தப்படுகின்றன.
-- நமது நிருபர் --