ADDED : மே 08, 2024 12:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேப்பேரி, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்வோரை, போலீசார் கைது செய்து வருகின்றனர். கடந்த ஏழு நாட்களாக வெவ்வேறு பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த, 20 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து, 22 கிலோ கஞ்சா, 25 கிராம் மெத் ஆம்பெட்டமைன், 11 மொபைல் போன்கள், இருசக்கர வாகனம் ஒன்றை பறிமுதல் செய்துள்ளனர்.
நடப்பாண்டில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த 115 பேர், குண்டாசில் கைதாகியுள்ளனர்.

