/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சிறுமிக்கு பாலியல் சீண்டல் வாலிபருக்கு 20 ஆண்டு சிறை
/
சிறுமிக்கு பாலியல் சீண்டல் வாலிபருக்கு 20 ஆண்டு சிறை
சிறுமிக்கு பாலியல் சீண்டல் வாலிபருக்கு 20 ஆண்டு சிறை
சிறுமிக்கு பாலியல் சீண்டல் வாலிபருக்கு 20 ஆண்டு சிறை
ADDED : செப் 13, 2024 12:35 AM
செங்கல்பட்டு, -சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு, 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம், நேற்று தீர்ப்பளித்தது. சென்னை தாம்பரம் காவல் மாவட்டத்தை சேர்ந்த, 5 வயது சிறுமி, 2020 ஜூலை 7ம் தேதி, வீட்டில் தனியாக இருந்தார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த உதயகுமார், 31, என்பவர், சிறுமிக்கு மிட்டாய் வாங்கிக் கொடுத்து, பாலியல் ரீதியாக துன்புறுத்தினார்.
இதுதொடர்பான வழக்கு விசாரணை, செங்கல்பட்டு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில், நீதிபதி நசீமாபானு முன்னிலையில் நடந்து வந்தது. விசாரணை முடிந்து குற்றம் நிரூபிக்கப்பட்டதால், உதயகுமாருக்கு, 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 200 ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி நசீமாபானு நேற்று தீர்ப்பளித்தார்.