/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அரசு தேர்வு இலவச பயிற்சி விண்ணப்பிக்க 24 கடைசி
/
அரசு தேர்வு இலவச பயிற்சி விண்ணப்பிக்க 24 கடைசி
ADDED : செப் 09, 2024 02:16 AM
சென்னை:தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம், மத்திய அரசின் பல்வேறு துறைகள் நடத்தும் தேர்வுகளை எழுதி அரசுப்பணிகளை பெறும் வகையில், தமிழக பயிற்சி துறையின் சார்பில், இலவசமாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
சென்னையை பொறுத்தவரை, பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சர் தியாகராயா கல்லுாரி வளாகத்தில் 500 பேருக்கும், சேப்பாக்கத்தில் உள்ள மாநில கல்லுாரி வளாகத்தில் 300 பேருக்கும், மதியம் 2:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை பயிற்சி வகுப்புகள் நடக்கும்.
அக்., இரண்டாம் வாரம் துவங்கும் புதிய வகுப்புகள், ஆறு மாதங்களுக்கு நடத்தப்படும். இதில் சேர, 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற, 18 வயது பூர்த்தியடைந்தோர், நாளை முதல் 24ம் தேதி வரை, www.cecc.in என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
மேலும் விபரங்களுக்கு, 044 - 2595 4905, 2851 0537 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.