/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாநகராட்சி கேரம் போட்டி 2,416 பேர் உற்சாகம்
/
மாநகராட்சி கேரம் போட்டி 2,416 பேர் உற்சாகம்
ADDED : மார் 11, 2025 07:03 PM

சென்னை:சென்னை மாநகராட்சியின் கேரம் போட்டியில், ஐந்து கவுன்சிலர், 120 பெண்கள் உட்பட, 445 பேர் உற்சாகமாக பங்கேற்றுள்னர்.
சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் கவுன்சிலர்களுக்கான விளையாட்டு போட்டிகள், நேற்று முன்தினம் துவங்கின. போட்டியில், 586 பெண்கள் உட்பட, 2,342 ஊழியர்கள், 74 கவுன்சிலர்கள் என, 2,416 பேர் உற்சாகமாக பங்கேற்றுள்ளனர்.
நேற்று காலை, பெரிமேடு நேரு விளையாட்டு அரங்கில், கேரம் போட்டிகள் நடந்தன. போட்டியில் ஆண்களில், 325 பேரும், பெண்களில், 120 பேர், ஐந்து கவுன்சிலர்கள் என, மொத்தம் 445 வீரர், வீராங்கனையர் உற்சாகமாக பங்கேற்றுள்ளனர். இன்று, இருபாலருக்கான செஸ் போட்டி நடக்க உள்ளன.
நாளை கீழ்ப்பாக்கம் நேரு பார்க்கில் கால்பந்து; 14ம் தேதி கண்ணப்பர் திடலில் டென்னிகாய்ட், எறிப்பந்து, கோகோ; 15ம் தேதி மந்தைவெளி அல்போன்சா திடலில், டேபிள் டென்னிஸ் உள்ளிட்ட போட்டிகள் நடக்கின்றன. இம்மாதம் 25ம் தேதி வரை போட்டிகள் நடக்க உள்ளன.