/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வங்கி மேலாளர் வீட்டில் 28 சவரன் நகை திருட்டு
/
வங்கி மேலாளர் வீட்டில் 28 சவரன் நகை திருட்டு
ADDED : ஆக 28, 2024 12:38 AM

கும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டி அருகே தேர்வழி ஊராட்சிக்கு உட்பட்ட குருசந்திரா நகரில், வாடகை வீட்டில் வசிப்பவர் ராஜசேகர், 34. அதே பகுதியில் உள்ள தனியார் வங்கியில் துணை மேலாளராக வேலை பார்த்து வருகிறார்.
இம்மாதம், 24ம் தேதி, வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன், சென்னை, குரோம்பேட்டை பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார்.
நேற்று காலை வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கிரில் கேட் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
இடைப்பட்ட நாட்களில், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள், பீரோவில் வைத்திருந்த, 28 சவரன் நகை, 3,000 ரூபாய், இரு கிரெடிட் கார்டுகளை திருடிச் சென்றனர். வழக்கு பதிந்த கும்மிடிப்பூண்டி போலீசார் மோப்ப நாய் ராக்ஸி மற்றும் கைரேகை நிபுணர்களை வரவழைத்து விசாரணையை துவக்கி உள்ளனர்.