/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
100 கலைஞர்களின் ஓவியங்கள் எழும்பூரில் 3 நாள் கண்காட்சி
/
100 கலைஞர்களின் ஓவியங்கள் எழும்பூரில் 3 நாள் கண்காட்சி
100 கலைஞர்களின் ஓவியங்கள் எழும்பூரில் 3 நாள் கண்காட்சி
100 கலைஞர்களின் ஓவியங்கள் எழும்பூரில் 3 நாள் கண்காட்சி
ADDED : ஆக 04, 2024 12:47 AM

சென்னை, எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில், மூன்று நாட்கள் நடக்கும் சென்னையில் ஓவியச்சந்தை திட்டம், நேற்று துவங்கியது.
கலை பண்பாட்டுத் துறை மற்றும் அரசு கவின் கலைக் கல்லுாரி சார்பில் நடக்கும் இந்நிகழ்வில், தமிழக ஓவியர்கள் மற்றும் சிற்பிகள், தங்கள் படைப்புகளை காட்சிப்படுத்தி விற்பனைக்கு வைத்து உள்ளனர்.
இத்திட்டத்தை, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் துவக்கி, பேசியதாவது:
தமிழகத்தில் முதல் முறையாக துவங்கப்பட்டுள்ள ஓவியச்சந்தை திட்டம், மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. 100 கலைஞர்களின் படைப்புகள், இந்த சந்தையில் வைக்கப்பட்டுள்ளன.
வாட்டர் கலர், கேன்வாஸ், ஆயில் கலர், அக்ரலிக், மிக்ஸர் மீடியா, பென்சில், பிரின்ட் மேக்கிங் ஓவியங்கள் மற்றும் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக, மணல் ஓவியங்கள், 1,330 திருக்குறள்களில் வண்ணம் பூசப்பட்ட திருவள்ளுவரின் உருவப்படம் அடங்கிய ஓவியம், பலரை வியக்கவைத்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில், ஓவியங்களைப் பார்வையிட்ட அமைச்சர் சாமிநதான், ஓவியர்களைப் பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார்.