/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
7 மண்டலங்களில் 3 நாட்கள் குடிநீர் ‛௶'கட்'
/
7 மண்டலங்களில் 3 நாட்கள் குடிநீர் ‛௶'கட்'
ADDED : ஏப் 25, 2024 12:35 AM
சென்னை,
அம்பத்துார் மண்டலத்தில் அத்திப்பட்டு, பாடி, பார்க் சாலை, டி.எஸ்.கிருஷ்ணா நகர், முகப்பேர் மேற்கு மற்றும் கிழக்கு பகுதியில், குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும். அண்ணா நகர் மண்டலத்தில் அரும்பாக்கம், அமைந்தகரை, சூளைமேடு; தேனாம்பேட்டை மண்டலத்தில் திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, ஐஸ் ஹவுஸ், மயிலாப்பூரில் வினியோகம் நிறுத்தப்படும்.
கோடம்பாக்கம் மண்டலத்தில் கோயம்பேடு, விருகம்பாக்கம், சாலிகிராமம், வடபழனி; அடையாறு மண்டலத்தில் ஆர்.ஏ.புரம், அடையாறு, வேளச்சேரி, தரமணி, திருவான்மியூர் ஆகிய பகுதிகளில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும்.
மேலும், வளசரவாக்கம் மற்றும் ஆலந்துார் மண்டலம் முழுதும் குடிநீர் வினியோகம் இருக்காது. பொதுமக்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, குடிநீரை சேமித்து வைக்க வேண்டும்.
அவசர குடிநீர் தேவைக்கு, 044--45674567 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டும் என, குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

