/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கைதான ரவுடி வீட்டில் 3 கிலோ கஞ்சா பறிமுதல்
/
கைதான ரவுடி வீட்டில் 3 கிலோ கஞ்சா பறிமுதல்
ADDED : ஆக 29, 2024 12:10 AM
தாம்பரம், பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், தேடப்பட்டு வரும் பிரபல ரவுடி சீசிங் ராஜாவின் நெருங்கிய கூட்டாளியான ரவுடி சஜித், 31, என்பவரை தாம்பரம் போலீசார், நேற்று முன்தினம் கைது செய்தனர்.
இவர் மீது இரட்டை கொலை உட்பட பல்வேறு கொலை மற்றும் கொள்ளை, இரு ஆயுத வழக்குகள் உள்ளன.
தலைமறைவான இவர், கஞ்சா, போதை மாத்திரை விற்பனை உள்ளிட்ட சட்ட விரோத செயலில் ஈடுபட்டது, போலீசாருக்கு தெரியவந்தது.
இந்நிலையில், படப்பையில் சஜித் வசிக்கும் வீட்டிற்கு சென்ற போலீசார், அங்கு சோதனை நடத்தினர்.
அப்போது, 3 கிலோ கஞ்சா, பட்டாக்கத்திகள் மற்றும் இரண்டு திருட்டு பைக் இருந்தது கண்டறியப்பட்டது. திருட்டு பைக்குகளை பயன்படுத்தி, அவர் கஞ்சா விற்று வந்ததும் தெரிந்தது.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், 2021ம் ஆண்டுக்கு பின் 'சீசிங்' ராஜா உடன் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என, சஜித் தெரிவித்துள்ளார். ஆனாலும், அவரது மொபைல் போனை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
நேற்று மாலை, தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சஜித், நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைக்கப்பட்டார்.