/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வெள்ளம் தடுக்க அடையாற்றில் 3 லட்சம் டன் மணல் அகற்றம்
/
வெள்ளம் தடுக்க அடையாற்றில் 3 லட்சம் டன் மணல் அகற்றம்
வெள்ளம் தடுக்க அடையாற்றில் 3 லட்சம் டன் மணல் அகற்றம்
வெள்ளம் தடுக்க அடையாற்றில் 3 லட்சம் டன் மணல் அகற்றம்
ADDED : ஜூலை 07, 2024 12:11 AM

சென்னை, சென்னையில் வெள்ளத்தடுப்பு நடவடிக்கையாக, அடையாறு முகத்துவாரத்தில் 3 லட்சம் டன் மணல் அகற்றப்பட்டு உள்ளது.
வடகிழக்கு பருவமழையால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றன. அடையாற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால், குடியிருப்பு பகுதிகள் மூழ்குகின்றன.
தென்சென்னையில் வெள்ளம் வடிவதற்கு, பல நாட்கள் ஆவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. கடந்தாண்டு டிசம்பர் மாதம், 'மிக்ஜாம்' புயலால் ஏற்பட்ட பாதிப்புக்குப் பின், முக்கிய நீர்வழித்தடங்களில் பல்வேறு வெள்ளத்தடுப்பு பணிகள் நடந்து வருகின்றன.
அதன் ஒருபகுதியாக சீனிவாசபுரத்தில், அடையாறு முகத்துவாரத்தின் அகலம் 200 மீட்டராக அதிகரிக்கப்பட்டு உள்ளது. அங்கு முகத்துவாரத்தில் அகற்றப்பட்ட 3,000 டன் மணல், சீனிவாசபுரம் கடற்கரையில் கொட்டப்பட்டு உள்ளது. இதன்வாயிலாக, கடல் அரிப்பு தடுக்கப்படும் வாய்ப்புஉள்ளது.
மேலும் வெள்ளக்காலங்களில் வினாடிக்கு 50,000 கன அடி நீரை, அடையாற்றின் வாயிலாக கடலுக்கு வெளியேற்ற முடியும். இப்பணிகளுக்கு 11 கோடி ரூபாயை நீர்வளத்துறை செலவழித்து உள்ளது.