/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
விஷவாயு தாக்கி இறந்தவர் குடும்பத்திற்கு ரூ.30 லட்சம்
/
விஷவாயு தாக்கி இறந்தவர் குடும்பத்திற்கு ரூ.30 லட்சம்
விஷவாயு தாக்கி இறந்தவர் குடும்பத்திற்கு ரூ.30 லட்சம்
விஷவாயு தாக்கி இறந்தவர் குடும்பத்திற்கு ரூ.30 லட்சம்
ADDED : ஆக 13, 2024 12:29 AM

ஆவடி, ஆவடி, ஜெ.பி.எஸ்டேட், சரஸ்வதி நகரில், நேற்று முன்தினம் 'ஜெட் ராடிங்' இயந்திரம் வாயிலாக பாதாளச் சாக்கடை சுத்தம் செய்யும் பணி நடந்தது.
இதில் ஈடுபட்டிருந்த, ஆவடி அருந்ததிபுரத்தைச் சேர்ந்த ஒப்பந்த ஊழியர் கோபி, 25, விஷ வாயு தாக்கி, பாதாள சாக்கடையினுள் விழுந்தார். மீட்கப்பட்ட அவர் ஆவடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், அவர் ஏற்கனவே இறந்தது தெரிந்தது.
ஆவடி போலீசார் விசாரணையில் உரிய பாதுகாப்பு உபகரணங்கள் அளிக்காமல், கோபியை பாதாளச் சாக்கடை பணியில் ஈடுபடுத்தியது தெரிந்தது. ஒப்பந்த நிறுவனமான வி.பி.அசோசியேட்ஸ் நிறுவன உரிமையாளர், மேலாளரான காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ரவி, 50, மற்றும் மேற்பார்வையாளர் ஜெ.பி., எஸ்டேட்டைச் சேர்ந்த ஆனந்த் பாபு, 30, ஆகியோர் மீது ஆவடி போலீசார், வழக்கு பதிவு செய்தனர்.
இதில், ரவி, ஆனந்த் பாபு ஆகியோரை, போலீசார் கைது செய்து திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், கோபியின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் 30 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டது.
அதற்கான காசோலையை, நேற்று காலை ஆவடி மாநகராட்சி அலுவலகத்தில், ஆவடி எம்.எல்.ஏ., நாசர், கோபியின் மனைவி தீபாவிடம் வழங்கினார். உடன், ஆவடி மாநகராட்சி கமிஷனர் கந்தசாமி மற்றும் அதிகாரிகள் இருந்தனர்.