/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
3 வீடுகளில் 30 சவரன் நகை ரூ.2.27 லட்சம் திருட்டு
/
3 வீடுகளில் 30 சவரன் நகை ரூ.2.27 லட்சம் திருட்டு
ADDED : ஆக 18, 2024 12:28 AM
சென்னை, பம்மல், நாகல்கேணி, பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் சாரதா தேவி, 58. கடந்த 11ம் தேதி, சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார்.
நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் கதவை திறந்து 15 சவரன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. சங்கர் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
மற்றொரு சம்பவம், பீர்க்கன்காரணை, டி.கே.சி., 2வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் பிரபா, 33. இவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
பீர்க்கன்காரணை போலீசாரின் விசாரணையில், 8 சவரன் நகை, 1.27 லட்சம் ரூபாய், கால் கிலோ வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.
செங்குன்றம் அடுத்த பம்மதுகுளம் கோணிமேடு பகுதியைச் சேர்ந்தவர் சித்ரா மாரி, 55. இவருடைய உறவினர் ஒருவர், இரு தினங்களுக்கு முன் இறந்து போனார். இதற்காக, கோணிமேடு பெருமாள் கோவில் தெருவில் வசிக்கும் உறவினர் வீட்டிற்கு சென்று, ஒருநாள் தங்கி விட்டு, நேற்று காலையில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு துணிமணிகள் சிதறி கிடந்தன. பீரோவில் வைத்திருந்த சீட்டு பணம் 1 லட்ச ரூபாய், 7 சவரன் நகைகள் திருடு போயிருந்தன.
இதுகுறித்து செங்குன்றம் போலீசார் விசாரிக்கின்றனர்.