/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஓய்வு ஆசிரியர் வீட்டில் 33 சவரன் திருட்டு
/
ஓய்வு ஆசிரியர் வீட்டில் 33 சவரன் திருட்டு
ADDED : ஆக 20, 2024 12:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர், திருவள்ளூர், வி.எம்.நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணமாராஜ், 65; அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இவரது இளைய மகன் தினேஷுக்கு திருமணம் நிச்சயம் செய்து, முதல் பத்திரிகையை பெண் வீட்டில் கொடுப்பதற்கு குடும்பத்தோடு கடந்த 17ம் தேதி திருப்பதிக்கு சென்றார்.
நேற்று முன்தினம் மாலை வீட்டிற்கு திரும்பிய போது முன்பக்க கதவு உடைக்கப்பட்டு, உள்ளே பீரோவில் இருந்த 33.5 சவரன் நகை திருட்டு போனது தெரியவந்தது.
கிருஷ்ணமாராஜ் புகாரின்படி திருவள்ளூர் நகர போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

