ADDED : ஜூன் 28, 2024 12:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆதம்பாக்கம், மடிப்பாக்கம் தனிப்படை போலீசார் ஆதம்பாக்கம், தில்லை கங்கா நகர் சுரங்கப்பாதையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அங்கு வந்த வேனை நிறுத்தி சோதனையிட்ட போது, மூட்டை மூட்டையாக குட்கா பொருட்கள் இருந்தன.
வேனுடன் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்த போது, அவர்கள் பெசன்ட்நகர், ஊரூர்குப்பத்தை சேர்ந்த சூர்யா,22, விழுப்புரம் மாவட்டம், மலையனுாரைச் சேர்ந்த சுரேஷ்,21, என தெரிந்தது.
330 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இருவரும் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

