தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ எம்.ஜி.ஆர்., பல்கலையின் 36வது பட்டமளிப்பு விழா

எம்.ஜி.ஆர்., பல்கலையின் 36வது பட்டமளிப்பு விழா

எம்.ஜி.ஆர்., பல்கலையின் 36வது பட்டமளிப்பு விழா


ADDED : செப் 30, 2026 05:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 30, 2026 05:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆவடி: டாக்டர் எம்.ஜி.ஆர்., கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் 36-வது பட்டமளிப்பு விழா, சென்னை வேலப்பன்சாவடியில் உள்ள ஏ.சி.எஸ்., மருத்துவக் கல்லுாரி வளாகத்தில், நேற்று நடந்தது.

இதில், சிறப்பு விருந்தினராக தமிழக கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் பங்கேற்றனர். இவர்களுக்கு, பல்கலை வேந்தர் ஏ.சி.சண்முகம் நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார்.

விழாவில், இளநிலை, முதுநிலை மற்றும் முனைவர் படிப்பில் சிறந்து விளங்கிய 53 மாணவ – மாணவியருக்கு, கவர்னர் அர்லேகர் பட்டம் வழங்கினார்.

தொடர்ந்து, இளநிலை, முதுநிலை மற்றும் முனைவர் பட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 4,200 மாணவ – மாணவியருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், கவர்னர் அர்லேகர் பேசுகையில், ‘‘கல்வியால் இந்த சமூகத்தையும், மக்களையும் எப்படி எதிர்கொள்ளப் போகிறோம். நம் நாட்டிற்கும் என்ன செய்ய போகிறோம் என சிந்தியுங்கள். இந்த சாதனை எனக்கானது மட்டுமல்ல; நம் தேசத்திற்கானது’ என்பதை நீங்கள் உணர வேண்டும். நான், ‘இந்த மண்ணின் மைந்தன்’ என்ற உணர்வே, உண்மையான குணநலனாகும்,’’ என்றார்.

நிகழ்ச்சியில், பல்கலை தலைவர் ஏ.சி.எஸ்., அருண் குமார், ஏ.சி.எஸ்., மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனை செயலர் ஏ.ரவிக்குமார், பல்கலை நிர்வாகிகள், பேராசிரியர்கள், மாணவ – மாணவியரின் பெற்றோர் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us