ADDED : மார் 09, 2025 01:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்தில் காட்டரம்பாக்கம் ஊராட்சி அமைந்துள்ளது. இரவு நேரத்தில் காட்டரம்பாக்கம் பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான மேய்கால் புறம்போக்கு நிலம், ஏரி, செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் செல்லும் கால்வாய் ஆகிய இடங்களில் இரவு நேரத்தில் ஜே.சி.பி., இயந்திரம் மூலம் மண் கொள்ளை அதிகம் நடக்கிறது.
இந்நிலையில், சோமங்கலம் போலீசார் நேற்று முன்தினம் இரவு காட்டரம்பாக்கத்தில் ரோந்து சென்றனர். அப்போது ஏரியில் மண் அள்ளிய ஒரு ஜே.சி.பி., 3 டாரஸ் லாரியை பறிமுதல் செய்தனர். மண் திருட்டில் ஈடுப்பட்ட ராஜ்குமார், 26, அரவிந்த, 26, முரளி, 30, விநாயகம், 65, ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.