/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
டாஸ்மாக்கில் தகராறு 4 வாலிபர்கள் கைது
/
டாஸ்மாக்கில் தகராறு 4 வாலிபர்கள் கைது
ADDED : மார் 04, 2025 08:47 PM
ஆதம்பாக்கம்:ஆதம்பாக்கம், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் தினேஷ், 32. இவர், கடந்த 2ம் தேதி, பரங்கிமலை ரயில் நிலையம் அருகிலுள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றார்.
அங்கு, நான்கு நபர்கள் நின்றிருந்தனர். அவர்களில் ஒருவர் மீது தினேஷ் மோதியுள்ளார். இதையடுத்து, நால்வரும் தினேஷை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர்.
இது தொடர்பாக, அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில், நால்வரும் தினேஷை தாக்கி, மது பாட்டில்களால் அடித்துள்ளனர். இதில் ரத்தக் காயமடைந்த அவர், அருகில் இருந்தவர்கள் உதவியுடன் ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்த புகாரின்படி, ஆதம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து, நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம், ஜமீன்சிங்கம்பட்டியை சேர்ந்த பெரியசாமி, 24, சக்கரபாண்டியன், 25, அய்யப்பன், 24, ராஜாஅய்யப்பன், 26, ஆகியோரை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.
இதனிடையை, ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்த செபாஸ்டின், 35, என்பவர், தினேஷை தாக்கியதாக நினைத்த அவரது சகோதரர் பிரகாஷ், 40, யாதவாள் தெருவில் நடந்து சென்ற செபாஸ்டியனை கடுமையாக தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இது குறித்து செபாஸ்டின் கொடுத்த புகாரின்படி, பிரகாஷை போலீசார் கைது செய்தனர்.