ADDED : ஆக 23, 2024 12:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு நடப்பு ஆண்டில் 300 கோடி ரூபாய் வழங்க, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அவரது அறிக்கை:
போக்குவரத்து கழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள 300 கோடி ரூபாய், பராமரிப்பு, எரிபொருள் மற்றும் இதர செலவுகளை ஈடு செய்வதற்கு உதவும். தினம் 35 லட்சம் பயணியர், மாநகர போக்குவரத்து கழக சேவையை சிறப்பான முறையில் பயன்படுத்த உறுதுணையாக இருக்கும்.
பெரும்பாக்கம், குரோம்பேட்டை, செம்மஞ்சேரி , தண்டையார்பேட்டை புதிய பணிமனைகளில் உள்கட்டமைப்பு பணிகள் செய்யப்பட வேண்டியுள்ளது. இப்பணிகளுக்கு 111 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

