/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கிண்டியில் 'கோல்ப்' பயிற்சி 45 சிறுவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு
/
கிண்டியில் 'கோல்ப்' பயிற்சி 45 சிறுவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு
கிண்டியில் 'கோல்ப்' பயிற்சி 45 சிறுவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு
கிண்டியில் 'கோல்ப்' பயிற்சி 45 சிறுவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு
ADDED : மே 30, 2024 12:28 AM

சென்னை,
மெட்ராஸ் ஜிம்கானா கிளப் 'கோல்ப்' சார்பில், ஜூனியருக்கான கோடைக்கால 'கோல்ப்' பயிற்சி முகாம், கடந்த 27ல் துவங்கி, ஜூன் 7ம் தேதி வரை நடக்கிறது.
முகாம், கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் உள்ள மெட்ராஸ் ஜிம்கானா கிளப் கோல்ப் மைதானத்தில் நடந்து வருகிறது.
இதில், நான்கு வயது முதல் 18 வயதிற்கு உட்பட்டோருக்கு மட்டும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
திங்கள் முதல் வெள்ளி வரை, வார நாட்களில் மட்டும், மாலை 4:30 முதல் 6:30 மணி வரை மட்டுமே நடக்கிறது. முகாமில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து, 45 சிறுவர்கள் ஆர்வமுடன் பங்கேற்று, பயிற்சி பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து, மெட்ராஸ் ஜிம்கானா கிளப் 'கோல்ப்' உறுப்பினரும், கோடைக்கால பயிற்சி முகாமின் பொறுப்பாளருமான ஹரி மனோஜ் கூறியதாவது:
கோல்ப் விளையாட்டை வசதி படைத்தவர்கள் மட்டும்தான் விளையாட முடியும் என ஒதுக்குகின்றனர். அப்படி கிடையாது. ஆர்வம் இருந்தால், யார் வேண்டுமானாலும் விளையாடலாம்.
இவ்விளையாட்டை பிரபலப்படுத்தும் விதமாக, 10 நாட்கள் கோடைக்கால பயிற்சி முகாமை துவக்கி உள்ளோம்.
முகாமிற்கு, 150க்கும் மேற்பட்டோர் பதிவு செய்தனர். தற்போது சில காரணங்களால், 45 பேர் முகாமில் பங்கேற்றுள்ளனர். மூன்று சீனியர் பயிற்சியாளர் உட்பட 10 பயிற்சியாளர்களால் பயிற்சி அளிக்கிறோம்.
இதில், 40 சதவீதம் பேர் மட்டுமே கிளப்பை சேர்ந்தவர்கள். மற்ற அனைவரும் பல இடங்களில் இருந்து வந்துள்ளனர்.
10 நாட்கள் நிறைவடைந்தவுடன், வாரத்திற்கு இரு நாட்கள், ஆண்டு முழுதும் பயிற்சி அளிக்கப்படும். அதைத்தொடர்ந்து, கோல்ப் லீக் போட்டியை நடத்த திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.