/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நீச்சல் போட்டி 450 பேர் பங்கேற்பு
/
நீச்சல் போட்டி 450 பேர் பங்கேற்பு
ADDED : ஆக 25, 2024 12:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்,திருவள்ளூர் மாவட்ட நீச்சல் மேம்பாட்டு மையம் சார்பில், மண்டல அளவிலான நீச்சல் போட்டி, மாவட்ட விளையாட்டு மைதானத்தில் உள்ள நீச்சல் குளத்தில் நேற்று நடந்தது.திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலுார் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த, 7 - 19 வயதுடைய, 300 மாணவர்கள், 150 மாணவியர் என மொத்தம் 450 பேர் பங்கேற்றனர்.
நேற்று காலை துவங்கிய போட்டி, மாலை 6:00 மணிக்கு நிறைவடைந்தது. எட்டு வகையான போட்டிகள், வயது வாரியாக நடந்தன. இதில், முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசு மற்றும் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

