/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரவுடி கொலை வழக்கில் சிறுவன் உட்பட 5 பேர் கைது
/
ரவுடி கொலை வழக்கில் சிறுவன் உட்பட 5 பேர் கைது
ADDED : ஏப் 27, 2024 12:23 AM
காசிமேடு, காசிமேடு, திடீர் நகரைச் சேர்ந்த ரவுடி தேசிங்கு, 47. இவர், கடந்த 24ம் தேதி மாலை, காசிமேடு, சூரியநாராயண சாலை அருகே மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். இது காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசார், இது குறித்து விசாரித்தனர்.
தேசிங்கின் மகனுக்கும் திடீர் நகர் பகுதியை சேர்ந்த கோபி, 32 என்பவருக்கும் முன் விரோதம் இருந்துள்ளது. கடந்த 2022ல், கோபி உட்பட 10 பேர், தேசிங்கு வீட்டிற்கு சென்று அவரது மகன் வல்லரசு எங்கே எனக்கேட்டு தகராறு செய்துள்ளனர். வல்லரசு இல்லாததால், தேசிங்கை கத்தியால் தாக்கி விட்டு சென்றனர். இது தொடர்பாக, தேசிங்கு அளித்த புகார் படி, கோபி உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டு, சிறைக்கு சென்றனர்.
சமீபத்தில் ஜாமினில் விடுதலையான கோபி மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து, கடந்த 24ம் தேதியன்று, தேசிங்கை கத்தியால் தாக்கி கொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, கோபி, 32, பாரதி, 33, அகேஷ், 29, ரஜீத், 23 மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த இரண்டு கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்களில் 17 வயது சிறுவன், சீர்திருத்தப்பள்ளியில் சேர்க்கப்பட்டார். மற்ற நான்கு பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். தலைமறைவான மேலும் ஐந்து பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

