/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பா.ஜ.,வினருக்கு பரிசாக 5 சவரன் செயின்
/
பா.ஜ.,வினருக்கு பரிசாக 5 சவரன் செயின்
ADDED : ஏப் 18, 2024 12:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, வடசென்னை லோக்சபா தொகுதிக்குட்பட்ட தமிழக முதல்வரின் தொகுதியான கொளத்துார் தொகுதியில் பா.ஜ.,வின் மூத்த தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் தொடர்ந்து பிரசாரம் செய்தனர்.
இதன் காரணமாக இங்கு, அதிகளவு ஓட்டுகளை பெற பா.ஜ., திட்டமிட்டுள்ளனர். இது, அடுத்து வரும் சட்டசபை தேர்தலுக்கு பெரிய அளவில் உதவும் என, அவர்கள் நம்பியுள்ளனர்.
இந்நிலையில், கொளத்துார் சட்டசபை தொகுதியில் தி.மு.க.,வைவிட 1 சதவீதமாவது அதிக ஓட்டுகளை வாங்கி தரும் தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு, 5 சவரன் தங்க செயின் வழங்கப்படும் என, மூத்த நிர்வாகி ஒருவர் கூறியுள்ளதால், கட்சியினர் குஷியில் உள்ளனர்.

