/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மனைவி, கவுன்சிலருக்கு வெட்டு சந்தேக கணவருக்கு '5 ஆண்டு'
/
மனைவி, கவுன்சிலருக்கு வெட்டு சந்தேக கணவருக்கு '5 ஆண்டு'
மனைவி, கவுன்சிலருக்கு வெட்டு சந்தேக கணவருக்கு '5 ஆண்டு'
மனைவி, கவுன்சிலருக்கு வெட்டு சந்தேக கணவருக்கு '5 ஆண்டு'
ADDED : ஆக 02, 2024 12:13 AM
சென்னை, சென்னை, கே.கே.நகரைச் சேர்ந்தவர் அமுதவல்லி, 40; அதே பகுதி தி.மு.க., கவுன்சிலர் தனசேகரன் அலுவலகத்தில் கணினி ஆப்பரேட்டர். இவரது கணவர் பொன்வேல், 42, மனைவியை சந்தேகப்பட்டு அவரிடம் தகராறு செய்து வந்தார்.
இந்நிலையில், கொரோனா காலமான 2020 அக்., 13ல், தன் அலுவலகத்தில் அமுதவல்லி பணியில் இருந்தார். அங்கு நண்பர் மணிகண்டனுடன் வந்த பொன்வேல், மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை வெட்டியுள்ளார்.
அமுதவல்லியின் அலறல் சத்தம் கேட்டு, தடுக்க வந்த தனசேகரனின் தலையிலும் வெட்டியுள்ளார். படுகாயம் அடைந்த இருவரும், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
அமுதவல்லி புகாரை விசாரித்த கே.கே.நகர் போலீசார், பொன்வேல், அவரது நண்பர் மணிவண்ணன் ஆகியோரை கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு, சென்னை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள 17வது கூடுதல் அமர்வு நீதிபதி ஆர்.தோத்திரமேரி முன் நடந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி, பொன்வேல், மணிவண்ணன் ஆகியோருக்கு தலா ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 5,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.