நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடுங்கையூர், கொடுங்கையூரை சேர்ந்தவர் மலர்விழி, 60. ஜூன் மாதம், பாத்ரூமில் விழுந்ததில் காயமடைந்தார். அவரது தாய் வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார்.
இவருக்கு தேவைப்படும் துணிகளை, கணவர் சந்திரசேகர் என்பவரும், தம்பி மகள் அருள்விழி என்பவரும் எடுத்து வந்து கொடுத்தனர்.
இந்நிலையில், மலர்விழி உடல்நிலை முன்னேற்றம் அடைந்ததையடுத்து, கடந்த 19ம் தேதி, தன் வீட்டிற்கு திரும்பினார். நேற்று வீட்டின் பீரோவில் இருந்த நகைகளை சரிபார்த்த போது, 54 சவரன் தங்க நகைகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.

