/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பஸ் மோதி 6 கார் சேதம் 4 பேர் காயம்
/
பஸ் மோதி 6 கார் சேதம் 4 பேர் காயம்
ADDED : ஆக 09, 2024 12:48 AM

மீனம்பாக்கம், சென்னை, பாரிமுனையில் இருந்து கிளாம்பாக்கம் நோக்கி, நேற்று மதியம் மாநகர பேருந்து ஒன்று சென்றது. மீனம்பாக்கம், ஜி.எஸ்.டி., சாலை சிக்னலில் சிவப்பு விளக்கு எரிந்ததால், மற்ற வாகனங்கள் நின்றிருந்தன.
அப்போது, வேகமாக சென்ற பேருந்து, உடனே 'பிரேக்' பிடிக்க முடியாமல் கட்டுப்பாட்டை இழந்து, சிக்னலில் நின்ற கார் மீது மோதியது. தொடர்ச்சியாக, முன்புறம் அடுத்தடுத்து நின்ற ஆறு கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி சேதமடைந்தன.
இந்த விபத்தில், பேருந்து மோதிய காரில் பயணித்த, ஆழ்வார்திருநகரைச் சேர்ந்த சங்கீதப்பிரியா,34, சாலிகிராமத்தைச் சேர்ந்த மோனிகா, 31, பிரபு, 31, மற்றும் கே.கே.நகரைச் சேர்ந்த கேத்தரின், 24, ஆகியோர் படுகாயமடைந்தனர். உடனே இவர்கள், ஆம்புலன்ஸ் வாயிலாக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதன் காரணமாக, ஜி.எஸ்.டி., சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பரங்கிமலை போக்குவரத்து போலீசார், பேருந்து மற்றும் ஆறு கார்களை அப்புறப்படுத்தினர்.
விபத்திற்கு காரணமான பேருந்து ஓட்டுனரான, கடலுார் மாவட்டம், பண்ருட்டியைச் சேர்ந்த வெங்கடேசன், 50, என்பவரிடம் விசாரிக்கின்றனர்.