/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
778 நட்சத்திர ஆமைகள் ஏர்போர்ட்டில் பறிமுதல்
/
778 நட்சத்திர ஆமைகள் ஏர்போர்ட்டில் பறிமுதல்
ADDED : ஆக 20, 2024 01:00 AM

சென்னை, சென்னையில் இருந்து மலேஷிய தலைநகர் கோலாலம்பூர் செல்லும் 'இண்டிகோ ஏர்லைன்ஸ்' பயணியர் விமானம், கடந்த 16ம் தேதி புறப்பட தயாராக இருந்தது. பயணியரின் உடைமைகளை, பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்து அனுப்பி கொண்டிருந்தனர்.
அப்போது, விமானத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த காதிர் இப்ராஹிம், 36, முகமது, 35, சையது, 40, ஆகிய மூன்று பேர் மலேஷியா செல்ல வந்திருந்தனர். அவர்கள் கொண்டுவந்திருந்த பெரிய அட்டைப் பெட்டிகள் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் வந்தது.
இதையடுத்து, அவற்றை திறந்து பார்த்த போது, இந்திய நட்சத்திர ஆமைகள் இருந்தன. கணக்கிட்டு பார்த்ததில் 778 ஆமைகள் இருப்பது தெரிய வந்தது. அவற்றை பறிமுதல் செய்த சுங்க அதிகாரிகள், கிண்டியில் உள்ள வன உயிரின பூங்காவில் ஒப்படைத்தனர். தொடர்ந்து மூவரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.

