/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
காரில் கஞ்சா கடத்தல் பெண் உட்பட 8 பேர் கைது
/
காரில் கஞ்சா கடத்தல் பெண் உட்பட 8 பேர் கைது
ADDED : நவ 25, 2024 03:40 AM

கொடுங்கையூர்:கொடுங்கையூர், எருக்கஞ்சேரி, டி.வி.கே.லிங்க் சாலை பகுதியில், கொடுங்கையூர் போலீசார் நேற்று, வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அவ்வழியே வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில், கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது.
விசாரணையில், செங்குன்றம், மகாவீர் கார்டனை சேர்ந்த ரமேஷ், 40, மாதவரம் ஜானகிராமன், 32, செங்குன்றம் ஹரி, 30, வியாசர்பாடி பிரசாந்த், 31, பெரம்பூர் ராஜேஷ்குமார், 41, சிந்தாதிரிப்பேட்டை கருணாகரன், 34, ஆவடி ஸ்ரீதர், 24, புதுகும்மிடிப்பூண்டி நதியா, 34, ஆகியோர் என்பது தெரியவந்தது.
போலீசார், எட்டு பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த 22 கிலோ கஞ்சா, 'ஷிப்ட்' கார், போலியான நம்பர் பிளேட் மற்றும் 5 லட்சம் ரூபாய் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
கஞ்சா விற்றடீக்கடைதொழிலாளி கைது
வேளச்சேரி,:வேளச்சேரி ரயில் நிலையம் அருகே, பையுடன் நின்ற, 16 வயது சிறுவனிடம், ரோந்து போலீசார் விசாரித்தனர்.
அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால், பையை சோதனை செய்தபோது, அதில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தன.
வேளச்சேரி போலீசார் விசாரணையில், பீஹாரைச் சேர்ந்த புல்பாபு, 21, என்பவரிடம் கஞ்சா வாங்கி வியாபாரம் செய்வது தெரிந்தது.
வேளச்சேரி, சி.ஐ.டி., நகரில் உள்ள ஒரு டீக்கடையில் வேலை செய்யும் புல்பாபு, பீஹாரில் இருந்து நண்பர்கள் வாயிலாக கஞ்சா கடத்தி வந்து, இங்குள்ள சில்லரை வியாபாரிகளிடம் விற்பனை செய்வது தெரிந்தது.
போலீசார், இரண்டு பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.