/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கொரட்டூரில் ரயில் மீது கல் வீச்சு 9 மாணவர்களிடம் விசாரணை
/
கொரட்டூரில் ரயில் மீது கல் வீச்சு 9 மாணவர்களிடம் விசாரணை
கொரட்டூரில் ரயில் மீது கல் வீச்சு 9 மாணவர்களிடம் விசாரணை
கொரட்டூரில் ரயில் மீது கல் வீச்சு 9 மாணவர்களிடம் விசாரணை
ADDED : மார் 11, 2025 07:07 PM
பெரம்பூர்:சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து, அரக்கோணம் வரை செல்லும் மின்சார ரயிலில், நேற்று காலை வழக்கம் போல் மாநில கல்லுாரி மாணவர்கள் பயணம் செய்தனர்.
அந்த ரயில் கொரட்டூர் ரயில் நிலையம் வந்து நின்ற போது, ரயில் மீது சிலர் கற்களை வீசி தாக்கியுள்ளனர்.
இதில் பயணியர் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்த தகவலின்படி, பெரம்பூர் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரயில் மீது கற்களை வீசியது, பச்சையப்பன் கல்லுாரி மாணவர்கள் என்பதை கண்டறிந்தனர்.
தொடர்ந்து, பச்சையப்பன் கல்லுாரியை சேர்ந்த, 17, 19 மற்றும் 21 வயதுடைய கல்லுாரி மாணவர்கள் ஒன்பது பேரை பிடித்து, காவல் நிலையம் அழைத்து வந்து, போலீசார் விசாரிக்கின்றனர்.