/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாடு முட்டி 10 வயது சிறுமி படுகாயம் திருவல்லிக்கேணியில் மீண்டும் சம்பவம்
/
மாடு முட்டி 10 வயது சிறுமி படுகாயம் திருவல்லிக்கேணியில் மீண்டும் சம்பவம்
மாடு முட்டி 10 வயது சிறுமி படுகாயம் திருவல்லிக்கேணியில் மீண்டும் சம்பவம்
மாடு முட்டி 10 வயது சிறுமி படுகாயம் திருவல்லிக்கேணியில் மீண்டும் சம்பவம்
ADDED : ஏப் 27, 2024 12:18 AM

திருவல்லிக்கேணி, சென்னை திருவல்லிக்கேணியில், மாடு முட்டி தள்ளியதில் 10 வயது சிறுமி படுகாயமடைந்தார். இதையடுத்து, மாநகராட்சி அதிகாரிகள் சாலையில் திரியும் மாடுகளை பிடித்து சென்றனர்.
சென்னை, திருவல்லிக்கேணி, நீலம் பாஷா தர்கா தெருவில் நேற்று முன்தினம் மாலை, ஜீவிதா என்ற 10 வயது சிறுமி விளையாடி கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் சுற்றி திரிந்த மாடு ஒன்று, திடீரென மிரண்டு சிறுமி ஜீவிதாவை முட்டி தள்ளியது.
இதை பார்த்த பொதுமக்கள், மாட்டை அங்கிருந்து விரட்டி, ஜீவிதாவை மீட்டனர். மயங்கிய நிலையில் இருந்த சிறுமி ஜீவிதாவை, அருகில் உள்ள ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு ஜீவிதா சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் நேற்று அந்த பகுதிக்கு மாநகராட்சி அதிகாரிகள் சென்று, சாலைகளில் திரிந்த மாடுகளை பிடித்து சென்றனர்.
சென்னை திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி கோவில் அருகில் சில மாதங்களுக்கு முன்பு மாடு ஒன்று முட்டி தள்ளியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார். அதை தொடர்ந்து, ஐஸ் ஹவுஸ் பகுதியில் மாடு ஒன்று மிரண்டு, ஆறு பேரை முட்டி தள்ளியது.
இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் மாடுகளை பிடித்து சென்று, அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர். தற்போது, மீண்டும் ஒரு சம்பவமாக மாடு முட்டி சிறுமி காயமடைந்தது, அப்பகுதியினர் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

