/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஏ.டி.எம்.,மில் மின்சாரம் பாய்ந்து 102 வயது முதியவர் பலி
/
ஏ.டி.எம்.,மில் மின்சாரம் பாய்ந்து 102 வயது முதியவர் பலி
ஏ.டி.எம்.,மில் மின்சாரம் பாய்ந்து 102 வயது முதியவர் பலி
ஏ.டி.எம்.,மில் மின்சாரம் பாய்ந்து 102 வயது முதியவர் பலி
ADDED : ஆக 15, 2024 12:30 AM

ஆர்.கே.நகர், திருவொற்றியூர், இந்திரா காந்தி நகரைச் சேர்ந்தவர் மல்லய்யா, 102. இவர், பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்று, கடந்த 32 ஆண்டுகளாக, 'பென்ஷன்' பெற்று வாழ்ந்து வந்தார்.
நேற்று, தன் மகள் விஜயம்மாள் என்பவருடன், தண்டையார்பேட்டை ஐ.ஓ.சி., முதல் பாலம் அருகிலுள்ள ஏ.டி.எம்.,மில், பணம் எடுக்க சென்றார். அப்போது, வயது முதிர்வு காரணமாக, ஏ.டி.எம்.,மில் உள்ள 'ஏசி கம்ப்ரசர் ஸ்டான்டில்' கை வைத்த போது, மின்சாரம் பாய்ந்து கீழே விழுந்துள்ளார்.
அங்கிருந்தோர் அவரை மீட்டு, ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்த போது, ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர்.