/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வண்டலுார் பூங்காவில் குட்டி ஈன்ற நீர்யானை
/
வண்டலுார் பூங்காவில் குட்டி ஈன்ற நீர்யானை
ADDED : ஆக 23, 2024 12:14 AM

தாம்பரம்வண்டலுார் உயிரியல் பூங்காவிற்கு, 2001ல் சுவிட்சர்லாந்தில் இருந்து, வாம்பூரி என்ற ஆண் நீர்யானை கொண்டுவரப்பட்டது. சில மாதங்கள் கழித்து, கர்நாடகாவில் இருந்து சவுந்தர்யா என்ற, பெண் நீர்யானை கொண்டு வரப்பட்டது.
இவற்றை இனப்பெருக்கம் செய்ய வைத்து, தற்போது ஐந்து பெண், இரண்டு ஆண் என, ஏழு நீர்யானைகள் உள்ளன.
இதை தவிர, ஏழு நீர்யானைகளும், தனித்தனி கூண்டில் பராமரிக்கப்பட்டு வந்தன.
'மிக்ஜாம்' புயலின் போது, கூண்டுகளில் முழுதுமாக தண்ணீர் நிரம்பியதால், பெண் கூண்டிற்குள், ஆண் நீர்யானைகள் சென்றதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து, கர்ப்பம் தரித்திருந்த பெண் நீர்யானை ஒன்று, நேற்று முன்தினம், ஒரு குட்டியை ஈன்றுள்ளது. குட்டியையும், தாய் நீர்யானையையும், பூங்கா மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.