/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
முகத்துவாரத்தில் அழகிய நடைபாதை விரைவில் பயன்பாட்டிற்கு திறப்பு
/
முகத்துவாரத்தில் அழகிய நடைபாதை விரைவில் பயன்பாட்டிற்கு திறப்பு
முகத்துவாரத்தில் அழகிய நடைபாதை விரைவில் பயன்பாட்டிற்கு திறப்பு
முகத்துவாரத்தில் அழகிய நடைபாதை விரைவில் பயன்பாட்டிற்கு திறப்பு
ADDED : ஏப் 26, 2024 12:28 AM

மெரினா, நேப்பியர் முகத்துவாரம் பகுதியில் பொதுமக்கள் கடலை ரசிக்கும் வகையில், அழகிய நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை எண்ணுார் முதல் மாமல்லபுரம் வரை உள்ள கடற்கரையை, அழகுபடுத்தும் பணியில் தமிழக அரசு மும்முரம் காட்டி வருகிறது. இதில், மெரினா கடற்கரையை உலகத்தரத்தில் அழகுபடுத்தும் பணியில், தீவிரம் காட்டி வருகிறது.
இந்த நிலையில், கடந்த ஆறு மாதங்களாக நேப்பியர் பாலம் முகத்துவாரம் பகுதியை தூர்வாரும் பணியில் ஈடுபட்டு வருகிறது. அதில், முக்கியமாக கடல் அரிப்பை தடுக்கும் வகையில், நட்சத்திர கற்கள் அமைக்கும் பணி முடிவடைந்துள்ளன.
வரும் பருவமழை காலத்தில், கடல் அரிப்பு ஏற்படாமல் இந்த தூண்டில் வளைவு கைகொடுக்கும். அது மட்டுமல்லாமல், கடற்கரையோரம் அழகிய பூச்செடிகள் வளர்ப்பது உள்ளிட்ட ஆயத்த பணிகளும் நடந்து வருகிறது.
இந்த நிலையில், நேப்பியர் பாலம் முகத்துவாரம் பகுதியில் தூர்வாரும் பணி முழுதும் முடிந்து, கூவம் ஆற்றுநீர் தங்கு தடையின்றி ஓடி, கடலில் கலந்து வருகிறது.
தற்போது, முகத்துவாரம் பகுதியில் நடைபாலம் அமைக்கும் பணி முடிவடைந்துள்ளது.
தற்போது, பொதுமக்கள் அந்த நடைபாலத்திற்கு சென்று, கடலை ரசிக்கும் வகையில் அமைத்துஉள்ளனர்.
சில நாட்களில் அந்த நடைபாலத்தில் செல்ல பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என தெரிகிறது.

