/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாமியாருக்கு அடி, உதை புழல் மருமகனுக்கு காப்பு
/
மாமியாருக்கு அடி, உதை புழல் மருமகனுக்கு காப்பு
ADDED : ஆக 31, 2024 12:21 AM

புழல், புழல், கதிர்வேடு, டேவிட் ஜெயபால் தெருவைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ், 32. இவரது மனைவி இந்துமதி. நேற்று முன்தினம் நள்ளிரவில் மது அருந்தி வீட்டிற்கு வந்த சுந்தர்ராஜ், வீட்டில் இந்துமதி இல்லாததை கண்டு ஆத்திரமடைந்தார்.
பின், அதே பகுதியைச் சேர்ந்த அவரது நண்பர்களான ஆரோக்கியதாஸ், 25, கிஷோர், 27, மற்றும் பிரசாத், 22, ஆகியோருடன், பிரிட்டானியா நகரில் உள்ள மாமியார் கவுரி வீட்டிற்கு சென்று, தகராறில் ஈடுபட்டு அவரை தாக்கியுள்ளார்.
மேலும், அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ராஜ்குமார் மற்றும் முகமது இம்ரான் ஆகியோரது, 'ஹோண்டா ஆக்டிவா' ஸ்கூட்டர் மற்றும் 'பஜாஜ் பல்சர்' பைக்குகளை அடித்து உடைத்து, ஆட்டோவின் கண்ணாடிகளை கல்லால் அடித்து சேதப்படுத்தினர்.
இவர்களின் அராஜகம் குறித்து தகவலறிந்த புழல் போலீசார், மூவரை கைது செய்து நேற்று சிறையில் அடைத்தனர்.
தப்பியோடிய சுந்தரராஜனை தேடி வருகின்றனர்.