/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஏ.டி.எம்.,மில் நுாதன திருட்டு 'பலே' சிறுவன் சிக்கினான்
/
ஏ.டி.எம்.,மில் நுாதன திருட்டு 'பலே' சிறுவன் சிக்கினான்
ஏ.டி.எம்.,மில் நுாதன திருட்டு 'பலே' சிறுவன் சிக்கினான்
ஏ.டி.எம்.,மில் நுாதன திருட்டு 'பலே' சிறுவன் சிக்கினான்
ADDED : ஜூன் 10, 2024 02:05 AM
ஆவடி:ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு 60 அடி சாலையில், எஸ்.பி.ஐ., வங்கி ஏ.டி.எம்., மையம் செயல்படுகிறது.
நேற்று இரவு, பொதுமக்கள் பலர் அந்த ஏ.டி.எம்.,மில் பணம் எடுக்க சென்றுள்ளனர். அப்போது, பணம் வராமல், வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்துள்ளது.
இந்த நிலையில், ஏ.டி.எம்.,மில் சந்தேகப்படும்படி நின்றிருந்த சிறுவன் ஒருவன், ஏ.டி.எம்., மிஷினை சாவியால் திறந்து பணம் எடுத்துக் கொண்டிருந்தான்.
அப்போது, பணம் எடுக்க வந்த நபர் ஒருவர், சிறுவனை கையும் களவுமாக பிடித்து, ஆவடி போலீசில் ஒப்படைத்தார்.விசாரணையில், உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சிவா, 15, என தெரிந்தது.
நேற்று மாலை அப்பகுதியில் சுற்றித் திரிந்த அந்த சிறுவன், ஏ.டி.எம்., மிஷினில் பணம் வெளிவரும் பகுதியில் அட்டை வைத்து அடைத்துள்ளான். இதனால், பொதுமக்கள் எடுக்க வேண்டிய பணம் ஏ.டி.எம்., மிஷினில் உள்ளே விழுந்துள்ளது.
பொதுமக்கள் வந்து சென்ற பின், சாவியால் ஏ.டி.எம்., மிஷினை திறந்து பணத்தை திருடியது தெரிய வந்தது.
சிறுவனை கைது செய்த போலீசார், அவனிடம் இருந்து 1 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்தனர்.