/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சாலையில் விளையாடிய சிறுவன் வேன் மோதி பலி
/
சாலையில் விளையாடிய சிறுவன் வேன் மோதி பலி
ADDED : ஆக 23, 2024 12:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு, செங்கல்பட்டு அடுத்த அனுமந்தபுத்தேரியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரது மகன் சிவகார்த்திகேயன், 10; ஐந்தாம் வகுப்பு மாணவர்.
இவர், நேற்று முன்தினம் இரவு சிவகார்த்திகேயன், வீட்டருகே பழைய ஜி.எஸ்.டி., சாலையோரம் விளையாடியுள்ளார். அப்போது, அவ்வழியாக செங்கல்பட்டு நோக்கி வந்த, 'ஈச்சர்' வாகனம் சிறுவன் மீது மோதியது.
இதில், சம்பவ இடத்திலேயே சிறுவன் உயிரிழந்தார். செங்கல்பட்டு போலீசார் விபத்து ஏற்படுத்திய ஓட்டுனரை தேடி வந்தனர். விபத்து ஏற்படுத்திய ஓட்டுனரான அனுமந்தபுத்தேரியைச் சேர்ந்த கணபதி, 44, என்பவரை, நேற்று கைது செய்து விசாரிக்கின்றனர்.

