/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பூந்தமல்லி அருகே கொடூரம் கட்சி நிர்வாகி படுகொலை
/
பூந்தமல்லி அருகே கொடூரம் கட்சி நிர்வாகி படுகொலை
ADDED : மே 23, 2024 12:33 AM

பூந்தமல்லி, பூந்தமல்லி அடுத்த மாங்காடு, அம்பாள் நகர், கிருஷ்ணன் தெருவைச் சேர்ந்தவர் ராஜாஜி, 45; ஹிந்து மறுமலர்ச்சி முன்னேற்ற முன்னணி கட்சி மாநில தலைவர். இவரது மனைவி கலா. தம்பதிக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.
நேற்று மாலை, குமணன் சாவடியில் உள்ள டீக்கடையில் ராஜாஜி, டீ குடித்துக் கொண்டிருந்தார். அப்போது, லுங்கி மற்றும் பனியன் அணிந்தபடி, கடைக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர், மறைத்திருந்த கத்தியை எடுத்து, ராஜாஜியை சரமாரியாக வெட்டினார். ரத்த வெள்ளத்தில் சாய்ந்த ராஜாஜி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து, அந்த நபர், சர்வ சாதாரணமாக அங்கிருந்து நடந்து சென்றார். பூந்தமல்லி போலீசார், ராஜாஜியின் உடலை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
சம்பவ இடத்தில் ராஜாஜியின் குடும்பத்தினர், கட்சி நிர்வாகிகள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அங்கிருந்தவர்களை கலைத்தனர். ராஜாஜியின் கொலைக்கான காரணம், கொலையாளி யார் என்பது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

