/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வியாபாரியின் வீடு புகுந்து ரூ.50,000 திருட்டு
/
வியாபாரியின் வீடு புகுந்து ரூ.50,000 திருட்டு
ADDED : செப் 10, 2024 12:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆவடி, ஆவடி அடுத்த கொள்ளுமேடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜா, 39; பாய் வியாபாரி. இவரது குடிசை வீட்டிற்கு கதவு இல்லாததால், துணியால் மூடி, நேற்று முன்தினம், குடும்பத்துடன் மெரினா கடற்கரைக்கு சென்றார்.
இரவு 11:00 மணி அளவில் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது, துணிகளுக்கு இடையே வைத்திருந்த 50,000 ரூபாய் திருடு போனது தெரிந்தது. ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் விசாரிக்கின்றனர்.