/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சிறுமிக்கு கட்டாய திருமணம் மாப்பிள்ளை மீது வழக்கு
/
சிறுமிக்கு கட்டாய திருமணம் மாப்பிள்ளை மீது வழக்கு
ADDED : ஏப் 24, 2024 12:27 AM
வியாசர்பாடி, திருவண்ணாமலையை சேர்ந்த 16 வயது சிறுமிக்கு, வியாசர்பாடி, வி.பி.காலனியில் உள்ள பீலிக்கான் முனீஸ்வரன் கோவிலில் திருமணம் நடந்ததாக, ராயபுரம் குழந்தைகள் நல அலுவலர் ஸ்டெல்லாவுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து குழந்தைகள் நல அலுவலர்கள் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு, சிறுமியை திருமணம் செய்த அஜித்குமாரிடம், 26 விசாரித்தனர்.
சிறுமிக்கும், அவரது அத்தை மகனான அஜித்குமாருக்கும் விருப்பம் இல்லாமல், குடும்பத்தினர் வற்புறுத்தலின்பேரில், கடந்த 15ம் தேதி திருமணம் நடத்தி வைத்தது தெரியவந்தது.
இதுகுறித்து எம்.கே.பி.நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் அஜித்குமார் மீது வழக்கு பதிந்து, அவர் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் ஐவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

