/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சிறுவன் உயிரிழப்பிற்கு காரணமான அலட்சிய போலீஸ்காரர் மீது வழக்கு
/
சிறுவன் உயிரிழப்பிற்கு காரணமான அலட்சிய போலீஸ்காரர் மீது வழக்கு
சிறுவன் உயிரிழப்பிற்கு காரணமான அலட்சிய போலீஸ்காரர் மீது வழக்கு
சிறுவன் உயிரிழப்பிற்கு காரணமான அலட்சிய போலீஸ்காரர் மீது வழக்கு
ADDED : ஆக 06, 2024 01:14 AM

சென்னை, திருவல்லிக்கேணியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் சேகர், 58, தன் மனைவி பவானி, 52, பேரன் அலோக்நாத் தர்ஷன், 5, உடன், நேற்று முன்தினம் இரவு 8:00 மணியளவில் மெரினா கடற்கரை சென்றார். அப்போது, காமராஜர் சாலையில், கருணாநிதி நினைவிடம் நோக்கி முதல்வர் ஸ்டாலின் கான்வாய் வாகனங்கள் வந்தன.
அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சிறப்பு காவல்படை போலீஸ்காரர் மகேந்திரன், 24, வாகன ஓட்டிகளிடம் கெடுபிடி செய்துள்ளார். உழைப்பாளர் சிலை அருகே வந்த சேகரின் ஆட்டோவை குறுக்கே வந்து மடக்கி உள்ளார்.
மழை பெய்து கொண்டிருந்ததால், திடீரென சேகர் 'பிரேக்' பிடிக்கவும், கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ, போலீஸ்காரர் மகேந்திரன் மீது மோதி தலைகீழாக கவிழ்ந்தது.
இதை பார்த்த முதல்வர் ஸ்டாலின் இறங்கி, விபத்தில் சிக்கியோரை மருத்துவமனையில் சேர்க்க ஏற்பாடு செய்தார். இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த சிறுவன் அலோக்நாத் தர்ஷன், மருத்துவமனையில் உயிரிழந்தான்; மற்றவர்கள் சிகிச்சையில் உள்ளனர்.
இந்நிலையில், பாதுகாப்பு பணியில் அலட்சியமாக செயல்பட்டு சிறுவனின் உயிரிழப்பிற்கு காரணமாக இருந்ததாக, போலீஸ்காரர் மகேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.