/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பெண் குளிப்பதை வீடியோ எடுத்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு
/
பெண் குளிப்பதை வீடியோ எடுத்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு
பெண் குளிப்பதை வீடியோ எடுத்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு
பெண் குளிப்பதை வீடியோ எடுத்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு
ADDED : மே 17, 2024 12:27 AM
கிண்டி, வேளச்சேரி, நேருநகர், மாதவன் தெருவைச் சேர்ந்தவர் கல்பனா, 31. இவர், கணவர் விஜயகுமாரின் மூன்று சகோதரர்கள் குடும்பத்தினருடன் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகிறார்.
கடந்தாண்டு டிச., மாதம், கல்பானா வீட்டில் குளித்த போது, தன்னை யாரோ வீடியோ எடுப்பதை உணர்ந்து, தன் மகளை பார்க்கும்படி கூறியுள்ளார்.
அப்போது, உறவினர் ராஜராஜன் என்பவர் அங்கிருந்து ஓடியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, ராஜராஜனின் பெற்றோர் ரவி-சத்யாவிடம் கல்பனா முறையிட்டுள்ளார். இதில், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
இதையடுத்து, 'ஹெல்ப் லைன்' வாயிலாக அளித்த புகாரின்படி, கிண்டி அனைத்து மகளிர் போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து விசாரித்தனர்.
இதையடுத்து, எதிர் தரப்பினர் ஆறு மாதங்கள் வீட்டை விட்டு வெளியேறுவதாக கூற, இரு தரப்பினரும் சமரசம் செய்து கொண்டனர்.
ஆனால், ஒரு மாதத்தில் அவர்கள் திரும்பி வந்து, தகராறில் ஈடுபட்டனர். இதையடுத்து, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் கல்பனா மனு தாக்கல் செய்தார்.
நீதிமன்ற உத்தரவுப்படி கிண்டி, மகளிர் காவல் நிலையத்தில் நேற்று வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடத்தப்படுகிறது.

