/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போதையில் பெண்கள் ரகளை 3 பிரிவுகளில் வழக்கு பதிவு
/
போதையில் பெண்கள் ரகளை 3 பிரிவுகளில் வழக்கு பதிவு
ADDED : செப் 11, 2024 12:36 AM
கோயம்பேடு,
கோயம்பேடு 100 அடி சாலையில், 'டெடி பியர்' என்ற தனியார் மதுக்கூடம் அமைந்துள்ளது. இங்கு, 8ம் தேதி நள்ளிரவு, பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தைச் சேர்ந்த ஆர்த்தி, 24, கீர்த்தனா, 22, துரைப்பாக்கம் கண்ணகி நகரைச் சேர்ந்த திவ்யா, 23, ஏஞ்சல், 22, ஆகிய நான்கு பெண்கள், மது அருந்தி வெளியே வந்துள்ளனர். அப்போது, அதே மதுக்கூடத்தில் இருந்து வெளியே வந்த மூன்று பெண்களுடன் தகராறு செய்துள்ளனர்.
ரோந்து வந்த அண்ணா நகர் மதுவிலக்கு பிரிவு பெண் உதவி ஆய்வாளர் சண்டையை தடுத்தார். அந்த நான்கு பெண்களும், பெண் உதவி ஆய்வாளர் மற்றும் பவுன்சர்களிடம் தகராறு செய்தனர். தகவல் அறிந்து கோயம்பேடு பேருந்து நிலைய போலீசார் அங்கு சென்றனர். அவர்களிடமும், போதையில் பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். பெண்களின் பெற்றோரை வரவழைத்து, நான்கு பெண்களையும் எச்சரித்து ஆட்டோவில் அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், இந்த நான்கு பெண்கள் மீது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல், போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, கோயம்பேடு போலீசார் விசாரிக்கின்றனர்.

