/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பா.ஜ., மாவட்ட தலைவர் மீது கொலை மிரட்டல் வழக்கு பதிவு
/
பா.ஜ., மாவட்ட தலைவர் மீது கொலை மிரட்டல் வழக்கு பதிவு
பா.ஜ., மாவட்ட தலைவர் மீது கொலை மிரட்டல் வழக்கு பதிவு
பா.ஜ., மாவட்ட தலைவர் மீது கொலை மிரட்டல் வழக்கு பதிவு
ADDED : ஜூலை 02, 2024 12:12 AM
சென்னை, தென்சென்னை லோக்சபா தொகுதியில், பா.ஜ., சார்பில் தமிழிசை போட்டியிட்டார்.
இந்த தேர்தல் பணி தொடர்பான ஆலோசனைக் கூட்டம், நேற்று முன்தினம் இரவு, வேளச்சேரி வி.ஜி.பி., செல்வா நகரில் நடந்தது. சென்னை கிழக்கு பா.ஜ.,வின் அரசு தொடர்பு பிரிவு மாவட்ட செயலர் பாலசுப்பிரமணியன், தேர்தல் பணி தொடர்பாக பேசினார்.
அப்போது, ''தேர்தல் பணியில் ஈடுபட்ட தொண்டர்கள், பொதுமக்களுக்கு உணவு வழங்கவில்லை; கட்சி வழங்கிய நிதியை ஏன், பகுதி வாரியாக பிரித்து வழங்கவில்லை,'' என, மாவட்ட தலைவர் சாய்சத்தியனிடம் கேட்டார்.
வேறு சில நிர்வாகிகளும், இதே கேள்வியைக் கேட்டனர்.
இதற்கு சாய்சத்யன், 'உன் கேள்விக்கெல்லாம் பதில் கூற முடியாது' என, ஒருமையில் பேசி உள்ளார். மீண்டும்,''தேர்தலுக்கு வழங்கிய பணத்தில் தானே, சில நாட்களுக்கு முன், சொகுசு கார் வாங்கினீர்கள்; கட்சி தலைமையை ஏன் ஏமாற்றுகிறீர்கள்,'' என, பாலசுப்பிரமணியன் கேட்டுள்ளார்.
இதற்கு, ''அதிகம் பேசுகிறாய்; உன் வாயை உடைத்து விடுவேன்,'' என, சாய்சத்யன் ஒருமையில் பேசியுள்ளார். இதில், இரு தரப்பினருக்கும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
பின், சில வட்ட நிர்வாகிகள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பினர். இதையடுத்து பாலசுப்பிரமணியன், வேளச்சேரி காவல் நிலையத்தில், சாய்சத்யன் மீது புகார் அளித்தார்.
அவதுாறாக பேசியது,அடித்தது, கொலை மிரட்டல் விடுத்தது' என, மூன்று பிரிவுகளின் கீழ், சாய்சத்யன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
பா.ஜ., கட்சிக்குள், தேர்தல் பணத்திற்காக சண்டையிட்டு, வழக்குப்பதிவு வரை சென்ற சம்பவம், தென்சென்னை தொகுதியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.